Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிப்காட் முதல் நூலகம் வரை.. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி, 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி செலவில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்த ஸ்டாலின், ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேபோல் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தேவையான 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

CM Stalin Announces 200 Cr SIPCOT Park and Development Projects in Tirupathur

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், காலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்டேன். அதனை கேட்டுவிட்டு அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியுமா? இதன் காரணமாகவே இந்த மாவட்டத்திற்கு 5 அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், பொதுமக்கள் மருத்துவ வசதிகளை பெறவும், வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யவும், ரூ.30 கோடி செலவில் 7 கிமீட்டருக்கு சாலை அமைக்கப்படும். அதேபோல், 2வதாக, குமாரமங்கலம் பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக அந்தப் பகுதியில் ரூ.6 கோடி செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். 3வதாக, நல்லகுண்டா பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவையொட்டி 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

4வதாக திருப்பத்தூர் நகரத்தின் மையப் பகுதியில் பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் ரூ.18 கோடியில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும். கடைசியாக ஆம்பூர் நகர் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1 கோடி செலவில் புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புகள் அம்மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+