மகளிர் உரிமைத் தொகை இன்னும் வாங்கலியா? முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அப்டேட்டை பாருங்க
சென்னை: கலைஞர் உரிமைத் தொகை பெறாத மகளிர், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் நிச்சயம் அவர்களுக்கும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் 9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் 4ஆம் கட்டமாக நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும்.
வரும் ஜூன் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இதுவரை 1.14 கோடி பெண்கள் உரிமைத் தொகையை பெற்று வருகிறார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக கூட இந்த கலைஞர் உரிமைத் தொகை வெற்றியை பார்த்துவிட்டு மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக அளித்து அதில் வெற்றியும் பெற்றது.
விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை, உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்டது இந்த திட்டம். இதற்காக சில விதிவிலக்குகளையும் தமிழக அரசு வைத்துள்ளது. ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவருக்கு மட்டுமே கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கும். 2.5 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள், தொழில் வரி செலுத்தும் குடும்பத்தினருக்கு இந்த திட்டம் கிடைக்காது.
வார்டு உறுப்பினரை தவிர பிற பதவிகளில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், எம்பி, எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் இருப்போரும், அவருடைய குடும்பத்தினரும் இந்த கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறவே முடியாது.
மத்திய, மாநில அரசு பதவிகளில் இருக்கும் குடும்பத்தினர், ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது. மத்திய, மாநில அரசு பதவிகளில் இருந்து ஆண்டுக்கு ரூ2.5 லட்சத்திற்கும் குறைவாகவே ஓய்வூதியம் பெற்றாலும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர முடியாது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாது. முதல் கட்டமாக 1,06,50,000 பேருக்கும் இரண்டாம் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications