ஜாக்பாட்.. எம்எல்ஏக்களின் மாதஓய்வூதியத்தை உயர்த்திய முதல்வர் ஸ்டாலின்.. எவ்வளவு தெரியுமா? ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் எம்எல்ஏக்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதவிர மருத்துவ படி மற்றும் குடும்ப ஓய்வூதியமும் ஜூன் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மாதம் 30ம் தேதி 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதன்பிறகு பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து தற்போது தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

CM Stalin announces monthly pension for former MLAs will be increased from Rs.25K to RS.30K from june

இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. துறை வாரியான அறிவிப்புகளை ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் முன்னாள் எம்எல்ஏக்களுக்கான மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

ஒருமுறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படுவோருக்கும், அவர்களின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்த மாஜி எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம் என்பது படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது முன்னாள் எம்எல்ஏக்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மருத்துவ படி ரூ.50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியமாக ரூ.12,500 வழங்கப்பட்டு வருகிறது. இந்த 3 வகையான ஓய்வூதிய பலன்களும் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு இந்த கூட்டத்தொடரிலேயே வெளியாகலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தான் முன்னாள் எம்எல்ஏக்களுக்கான மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‛‛முன்னாள் சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.25,000ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து இந்த உயர்வு வழங்கப்படும்.

மேலும் மருத்துவ படி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் 12,500ல் இருந்து ரூ.15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய பலன்களை முன்னாள் எம்எல்ஏக்கள் வரும் ஜூன் மாதம் முதல் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+