சீட்டை கலைத்துப் போட்ட ஸ்டாலின்.. கொங்கு மண்ணில் ’மீண்டும்’ செந்தில் பாலாஜி! மொத்தமாய் இறங்கும் பவர்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் தமிழகத்தின், பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பதற்காக கூடுதலாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் கோவையின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்குப் பிறகு முதன் முறையாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அதில், துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக பதவி ஏற்று கொண்ட செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்தும், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 38,000 கோடி ரூபாய் மதிப்பிலான 14 புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த புதிய முதலீடுகள் மூலம் 46 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சிப் பணிகளை கண்காணிப்பதற்காக பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேருவும், தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமியும், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலுவும், தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்ச சக்கரபாணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தியும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரும்,
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழியும், மயிலாடுதுறை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் மெய்யநாதனையும் நியமித்து முதல்வர் மு.கஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் வருவாய் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதபடுத்தி கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications