தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.. ஸ்டாலின் வீடியோ
சென்னை: தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழகத்தை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பிரச்சாரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ மூலம் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அதில் அவர் கூறுகையில் வணக்கம் , நல்லாயிருக்கீங்களா? ஏப்ரல் 19ஆம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள். நாட்டோட எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

உங்கள் வாக்கு உங்கள் தொகுதி எம்பியை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாக்கு இது! இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.
நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு! #Vote4INDIA pic.twitter.com/un6mwQKlYG
— M.K.Stalin (@mkstalin) April 17, 2024
அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடத்துற தேர்தல், மதம், ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.
மாதாமாதம் மகளிருக்கு ரூ 1000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணம் திட்டம் , பள்ளி குழந்தைகள் காலையில் பசியில்லாமல் படிக்க முதல்வரின் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ 1000 வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தர நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்றத் துணையாக இருக்கிறோம். உங்கள் திராவிட மாடல் அரசோட சாதனைகள் இந்தியா முழுவதும் எதிரொலிக்க இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க தமிழையும் தமிழரையும் உண்மையாக நேசிக்கிற ஒன்றிய ஆட்சி டெல்லியில் அமைய வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமிக்கு, தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனுக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவுக்கு திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் சசிகாந்த் செந்திலுக்கு காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் க.செல்வத்திற்கு , அரக்கோணம் தொகுதியில் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு , வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் கோபிநாத்துக்கு தருமபுரி தொகுதியில் போட்டியிடும் ஆ. மணிக்கு திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரைக்கு ஆரணி தொகுதியில் எம்.எஸ்.தரணிவேந்தனுக்கு விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசனுக்கு வாக்களியுங்கள்.
சேலம் தொகுதியில் போட்டியிடும் செல்வகணபதிக்கு, நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் மாதேஸ்வரனுக்கு ஈரோடு தொகுதியில் போட்டியிடும் பிரகாஷுக்கு திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் சுப்பராயனுக்கு நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவுக்கு கோவை தொகுதியில் போட்டியிடும் கணபதி ப ராஜ்குமாருக்கு பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் ஈஸ்வரசாமிக்கு திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு கரூர் தொகுதியில் போட்டியிடும் ஜோதிமணிக்கு திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரைவைகோவுக்கு பெரம்பலூர் தொகுதியில் அருண் நேருவுக்கு கடலூரில் போட்டியிடும் விஷ்ணுபிரசாத்திற்கு சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் ஆர்.சுதாவுக்கு நாகையில் போட்டியிடும் செல்வராஜுக்கு தஞ்சை தொகுதியில் போட்டியிடும் முரசொலிக்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்திற்கு மதுரை தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசனுக்கு தேனி தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்ச் செல்வனுக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மாணிக்கம் தாகூருக்கு ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனிக்கு தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்கு தென்காசியில் போட்டியிடும் ராணி ஸ்ரீகுமாருக்கு நெல்லை தொகுதியில் போட்டியிடும் ராபர்ட் புரூஸுக்கு கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்திற்கு வாக்களித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications