தெலுங்கில் மாட்லாடும் குகேஷ்..முதல்வர் 5 கோடி கொடுத்தது ’இதற்கு’ தான்! நாதக சாட்டை துரைமுருகன் பரபர!
சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ்-க்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில்,
தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது போல குகேஷ் அவர்களுக்கு 5 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இனப்பற்று பாராட்டுக்குரியது என கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன்.
உலக அளவிலான செஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்களான பிரகியானந்தா, குகேஷ் உள்ளிட்டோர் உலக அளவிலும் இந்திய அளவிலும் பல சீனியர் வீரர்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக அளவில் இந்தியாவின் பெருமையையும் தமிழகத்தின் பெருமையும் ஒருசேர உயர்த்தியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான முகுகேஷ். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் கலந்து கொண்டார்.
சீனாவின் டிங் லிரனுடன் அவர் மோதினர். 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 7.5 புள்ளிகளை பெறுபவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர். முதல் 13 சுற்றுகளில் முகேஷும் டிங்கும் இரண்டு போட்டிகளில் வென்றிருந்த நிலையில் மற்ற போட்டிகள் டிரா ஆனது. இதை அடுத்து இருவரும் தலா 6.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். கடைசி போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய முகேஷ் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றார்.
இதை அடுத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் உலக அளவில் தமிழகத்தின் பெருமையை பறை சாற்றிய இளம் செஸ் வீரர் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர் என்பதாலேயே குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டு இருப்பதாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆன சாட்டை துரைமுருகன். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,”தனது இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ள தெலுங்கு இன சகோதரன் குகேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள். தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது போல குகேஷ் அவர்களுக்கு 5 கோடியை ஊக்கத்தொகையாக வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இனப்பற்று பாராட்டுக்குரியது” என கூறியுள்ளார்.
ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு நமது தெலுங்கு பையன் குகேஷுக்கு வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்த நிலையில் யார் அவரது மொழி என்ன அவர் தமிழரா அல்லது தெலுங்கரா என்ற வார்த்தை போர் இணையத்தில் தொடங்கி இருக்கிறது இப்படி பலரும் குகேஷ் குறித்து விவாதித்து வரும் நிலையில் சாட்டை துரைமுருகனின் பதிவு பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குகேஷ் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், அவரது திறமையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தியது தமிழ்நாடு என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications