ஆளுநர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் & திமுக கூட்டணி.. பங்கேற்ற முக்கிய தலைகள்!
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளன.

ஆளுநர் தேநீர் விருந்தில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோர் ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தமிழக ஆளுநர் மாளிகையான சென்னை கிண்டி ராஜ் பவனில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்கும். இந்தநிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் தேநீர் விருந்துக்கு தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர்.ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.
திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு திமுக கட்சி சார்பில் ஆளுநர் விருந்தை புறக்கணித்தபோதும், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர் என்பதால் இந்த ஆண்டும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்படுவதை எதிர்த்து, சுதந்திர தினத்தை ஒட்டி அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து தொடங்கியுள்ள சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. முன்னதாக அறிவித்தபடி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ளது.
பாஜக, அதிமுக, தேமுதிக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளன. ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை வருகை தந்துள்ளார். அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோர் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்துக்கு வருகை தந்துள்ளனர். தேமுதிக சார்பில், விஜய பிரபாகரன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications