கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது.. ரஜினி வசனம் பேசி மாணவர்களுக்கு உத்வேகம் அளித்த ஸ்டாலின்!
சென்னை: கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.. கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது என்று ரஜினிகாந்த் வசனத்தை முதல்வர் ஸ்டாலின் பேசி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார். பெண்களுக்கு அறிவு தான் உண்மையான அழகு என்று கூறிய ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வியில் பெண்கள் சேர்வது 34% உயர்ந்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக பெருமிதம் கூறியுள்ளார்.
சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.. இங்கு நெகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. கூடுதல் பொறுப்புணர்வை இந்த பாராட்டு விழா எனக்கு தருகிறது. இன்னும் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் உள்ளது.

அவற்றை நிறைவேற்றுவதற்கு மீண்டும் நாங்கள் ஆட்சியமைப்போம். புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயர் கல்வியில் சேர்வது 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தால் நகர்ப்புற மாணவிகளைக் காட்டிலும் கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். பட்டப்படிப்புடன் நிறுத்தாமல், ஆராய்ச்சி படிப்பு வரை பெண்கள் படிக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை பெண்கள் என்றாலே அழகுதான். அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவுதான் உண்மையான அழகு. படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உலகிலேயே அழகான அணிகலம். பெண்கள் முன்னேறினால், ஒரு தலைமுறையே முன்னேறும். வெற்றிக்கு எப்போதும் ஷார்ட் கட் கிடையாது. கடின உழைப்பை கொடுத்தால் தான் வெற்றி பெற்ற முடியும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனம் ஒன்று வரும்.. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.. அப்படி கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது.. அதனால் வெல்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது. தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உள்ளது. சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி தமிழ்நாட்டில் மட்டும்தான் செலுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications