அரசியலில் புதிய எதிரிகளா.. நான் யாரையும் அப்படி பார்ப்பதில்லை.. கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின், சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்தனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து அரசியலில் புதிய எதிரிகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஸ்டாலின், அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை என்று பதில் அளித்தார். அதேபோல், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் விரைவில் திமுக தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலின் போது திமுக எம்பி டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. அதில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். மீண்டும் இதே குழு அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல் திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய்க்கும் முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. திமுகவை விஜய் தொடர்ந்து சீண்டினாலும் 2ஆம் கட்ட மற்றும் 3ஆம் கட்டத் தலைவர்களை வைத்தே பதில் அளித்து வருகிறது. இப்போது விஜய்யை எதிரியாக பார்க்கவில்லை என்று ஸ்டாலின் கூறி இருப்பது தவெகவினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம்












Click it and Unblock the Notifications