என்னது தமிழர்கள் குண்டு வைத்தார்களா? பாஜகவுக்கு இதே வேலை.. தேர்தல் ஆணையத்தை டேக் செய்த ஸ்டாலின்!
சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் அண்மையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசி இருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

பெங்களூர் ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து, பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு, தேசிய புலனாய்வு முகமை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
பாஜக அமைச்சரின் சர்ச்சை கருத்து: இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் (கர்நாடகா) ஹோட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.
பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றின்போது பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
தமிழர்கள் குண்டு வைக்கிறார்கள்: இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷம் போடுகிறார்கள். அவர்களை தடுப்பது இல்லை. மேலும் கேரளாவில் இருந்து வருபவர்கள் இங்கு மாணவர்கள் மீது ஆசிட் வீசுகிறார்கள், அப்படி செய்யபவர்கள் மீது கர்நாடகா மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் ஷோபா கரந்தலாஜே முன்வைத்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களை தூண்டி விட்டு வெறுப்பை பரவி, பிரிவினைக்கு வித்திடுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
கொதித்து எழுந்த ஸ்டாலின்: இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தமிழர்களை தொடர்பு படுத்தி பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தேர்தல் ஆணையம் இந்த வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்ஐஏ அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பில் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும். பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடர்களும் நிச்சயம் நிராகரிப்பார்கள்.
பாஜகவினரின் பிரிவினைவாத அரசியல்: அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். பிரதமர் முதல் தொண்டர்கள் வரை, பாஜகவில் உள்ள அனைவரும் இதுபோன்ற பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications