சரியா இன்னும் 10 நாட்கள்தான் இருக்கு! ரூ 1000 பொங்கல் ரொக்கம் இன்றாவது உண்டா? இல்லையா?
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரூ 1000 ரொக்கம் குறித்த அறிவிப்பு இன்றாவது வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொங்கல், மகாசங்கராந்தி என்ற பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு உள்ளிட்ட 21 பரிசுகளுடன் ரூ 1000 ரொக்கம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டு பொங்கல் வருவதற்கு 10 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை கொடுப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு எப்போது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று முன் தினம் இரவு வெளியிட்டது. அதாவது பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் கடிதங்களில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கி 31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.238,92 கோடி செலவினம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரூ 1000 வழங்கப்படுவது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று வெளியான அரசாணையில் எதுவும் இல்லை. பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ1000 வழங்கப்படுவதற்கான அறிவிப்பு இன்றாவது அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications