சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கிய தமிழ்நாட்டு கால்பந்து வீராங்கனைகள்.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி அரையிறுதி போட்டியில் ரெயில்வே அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு அணி கைப்பற்றி அசத்தியது.
27வது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் தமிழக மகளிர் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றதற்கு பாராட்டுகள்! தோல்வியுறாத சாதனையுடன் நீங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்த சாதனை மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது.
உங்கள் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழுப்பணி எங்களை பெருமைப்படுத்தியுள்ளது. நீங்கள் தொடர்ந்து உயர்ந்து உயர்ந்து நமது மாநிலத்திற்கு மேலும் பாராட்டுகளை கொண்டு வர வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Udhay (@Udhaystalin) June 28, 2023
பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள சந்தியா, இந்துமதி… pic.twitter.com/ghnw1wKtsp
சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள சந்தியா, இந்துமதி உட்பட அத்தனை வீராங்கனையரையும் பாராட்டுகிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயின்ற வீராங்கனைகளை அதிகம் கொண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணி, இன்னும் பல சாதனைகளை புரியட்டும். திமு கழக அரசு அவர்களுக்கு துணை நிற்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications