அதிமுக எம்.பி டெல்லியில் பேசலயா? ஆதாரத்தை நான் காட்டவா? சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: "அதிமுக எம்.பி கனிமவள சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து பேசினார். அதை மறுக்கிறீர்களா? பேசவில்லை என நீங்கள் சொன்னால், ஆதாரத்தை நான் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறேன்" என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக விளக்கம் அளித்தபோது அமளியில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட அனுமதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் இன்று பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக மாநிலங்களவை உறுப்பினர், கனிமவள திருத்த மசோதாவுக்கு ஆதரித்து வாக்களித்ததே எல்லா பிரச்சனைக்கும் காரணம். டங்ஸ்டன் சுரங்கம் அமைய மூல முதல் காரணமே அதிமுகதான்.

மதுரை அரிட்டாபட்டியில் ஒருபோதும் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஏலம் விட முயற்சித்தபோது அப்போதே எதிர்த்தது திமுக அரசு. எதிர்ப்பை மீறிதான் டங்ஸ்டன் ஏல நடைமுறையை ஒன்றிய அரசு மேற்கொண்டது. ஒன்றிய அரசு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஏலம் கொடுத்தபோதும் திமுக அரசு தொடர்ந்து எதிர்த்தது.
மாநில உரிமைகளை பாஜக அரசு அபகரித்ததை அதிமுக ஆதரித்ததன் விளைவு தான் இன்றைக்கு டங்ஸ்டன் சுரங்க ஏலமாக வந்திருக்கிறது. டங்ஸ்டன் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட அதிமுக முயற்சி செய்து வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அதிமுக குளிர்காய நினைக்கிறது." எனத் தெரிவித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், "அதிமுக எம்.பி தம்பிதுரை கனிமவள சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து பேசினார். அதை மறுக்கிறீர்களா? பேசவில்லை என நீங்கள் சொன்னால், ஆதாரத்தை நான் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கிறேன்." என அதிமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications