அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்காத தமிழகத்தால் பாஜக மூச்சு திணறுகிறது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்காத தமிழகத்தால் பாஜக மூச்சு திணறுகிறது என திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக பொதுக் குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக தலைவராக 2ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் திமுக முதன்மைச் செயலாளர், திமுக துணை பொதுச் செயலாளர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை அறிவித்தார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் கூறியிருப்பதாவது: நமது கவனத்தை திசை திருப்புவதுதான் எதிரிகளின் ஒரே நோக்கம். நிதிநிலை சீராக இருந்திருந்தால் இன்னும் பல 100 திட்டங்களை தீட்டியிருப்போம்.

திமுகவினர் பேசியதை
திமுகவினர் பேசியதை வெட்டியும் ஒட்டியும் பரப்புவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக முக்கியமான சக்தியாக திகழ வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் 100% வெற்றிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியம்.

பாஜக வெல்வதற்கு
பாஜக வெல்வதற்கு எந்த கீழ்த்தரமான செயலையும் செய்யக் கூடும். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள். அதனால் பாஜக தமிழகத்தில் மூச்சு திணறுகிறது. அம்மையார் ஜெயலலிதா தலைமைக்கு பின் அதிமுக கலகலகத்து கிடக்கிறது. அதிமுகவின் பிளவுகளில் குளிர்காய நினைக்கிறது பாஜக.

2 மாதங்களில் பூத் கமிட்டி
சாதனைகளை சொல்ல முடியாத பாஜக; சரிந்தும் சிதைந்து கிடக்கும் அதிமுக. லோக்சபா தேர்தலுக்கான பூத் கமிட்டியை 2 மாதங்களில் முடித்தாக வேண்டும். திமுகவில் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வாய்ப்பை பெற முடியாதவர்கள் வருந்த வேண்டாம். புதிய நிர்வாகிகள், பொறுப்புக்கு வர இயலாத அனைவரையும் ஒருங்கிணைத்து அரவணைத்து செயல்பட வேண்டும்.

கற்கோட்டை
திமுக பழுத்த மரம் அல்ல, கோட்டை, இதன் மீது கற்களை வீசனால் கோட்டை பலம் பெறுமேயொழிய பலவீனம் அடையாது. இனி தமிழகத்தை திமுகதான் நிரந்தரமாக ஆள போகிறது. சட்டசபை தேர்தலுக்கு பிறகு திமுகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளது. தமிழர்களை தமிழர்கள் என உணர வைத்த இயக்கம் திமுக. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய இயக்கம் திமுக. ஒரு மாநிலம் என இல்லாமல் இந்த நாட்டிற்கான தன்னிறைவை உருவாக்கிய இயக்கம் திமுக. இவ்வாறு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்!












Click it and Unblock the Notifications