பிடிக்காட்டி ஆளுநர் பதவியில் ஏன் ஆர்.என்.ரவி ஒட்டி கொண்டிருக்க வேண்டும்?முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: அரசியல் சட்டக் கடமைகளை செய்ய மனமில்லாத ஆளுநர், அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆளுநர் உரையை வாசிப்பது சட்டசபை ஜனநாயகத்தின் மரபு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார்
@rajbhavan_TN.

கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
"தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா! என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர் சட்டசபையினுள் சென்ற போது அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் உரையை வாசிக்காமலேயே அங்கிருந்து புறப்பட்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பதிலாக முதலில் தேசிய கீதத்தை இசைக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. அதனால் தான் வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டசபையை அவமதித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்தியமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களின் கண்டன அறிக்கை: இன்று தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு, தமிழக அரசிற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையுடன் தொடங்குகின்ற சட்டப்பேரவை நிகழ்வின் போது, அனைத்து மாநிலங்களும் தேசிய கீதம் ஒலிக்கச் செய்வது இயல்பு மற்றும் நமது கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப் பேரவையில் மட்டும், மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து தேசிய கீதம் அவமதிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
தமிழக மக்களின் நலனுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து, இதுபோன்ற தேவையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கும் இந்தப் போலி திராவிட மாடல் அரசு, தேச விரோதமாக நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும், மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தும் அதை ஏற்க மறுத்த சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களின் போக்கு மிகுந்த கண்டனத்திற்கு உரியது. சபாநாயகர் என்பவர் சட்டசபையில் பொதுவானவராகவே செயல்பட வேண்டுமே தவிர, திமுக என்ற ஒரு கட்சிக்கு ஒற்றை சார்பாளராக இயங்குவது நியாயமற்ற ஒன்றாகும்.
தமிழக ஆளுநர் அவர்களுடன் முரண்பட்டு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் போக்கை தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications