அக்னிபாத் திட்டத்தை திரும்பப்பெறுக! லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப்பணி கனவை சிதைக்காதீர் -ஸ்டாலின்
சென்னை: அக்னி பத் என்ற திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப்பணி என்ற லட்சியத்தை சிதைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அக்னி பத் திட்டத்துக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், முதல்வர் ஸ்டாலினும் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

அக்னி பத் திட்டம்
இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள "அக்னிபத்" திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

எல்லோரும் எதிர்ப்பு
மாதமிருமுறை வெளிவரும் பிரபல ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி பக்ஸி, "இத்திட்டத்தைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப் போனேன். For God's sake please don't do it" என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் கத்யன், "4 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் இராணுவ வீரர், தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்குப் போரில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது" என்று கவலை தெரிவித்துள்ளார்.

பகுதிநேரப் பணியல்ல
அரசியல் கட்சிகள் தவிர, நாட்டின் பாதுகாப்புப் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய பல முன்னாள் இராணுவ அதிகாரிகளும், "இராணுவப் பணி பகுதிநேரப் பணி" அல்ல என்றும், "இதுபோன்ற தேர்வு, இராணுவத்தில் கட்டுப்பாட்டைக் கெடுக்கும்" என்று கூறி, இந்தத் தேர்வுத் திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திரும்பப் பெறுக
இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும் இந்த "அக்னிபத்" எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications