முகக் கவசம் அணிவதை உறுதி செய்யுங்கள்- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணிவதை உறுதி செய்யுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்ததால் கொரோனா முடிந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அது போல் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,57,545 பேராகும்.

தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று இரட்டை இலக்கங்களில் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
ஏற்கெனவே கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. அது போல் மெகா தடுப்பூசி முகாம்களும் நிறுத்தப்பட்டன. ஆனால் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வரும் ஜூன் மாதம் 4 ஆவது அலை உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவத் துறை செயலாளர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில் வடமாநிலங்களிலும் சென்னை ஐஐடியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்தில் தொற்று அதிகரித்துள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை 1.48 கோடி பேராகும். பூஸ்டர் டோஸ் போட தகுதியிருந்தும் 11.06 லட்சம் பேர் போடவில்லை. கொரோனா பரவலை தடுக்க நம்மிடம் இருக்கும் ஆயுதம் கொரோனா தடுப்பூசி. தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். அது போல் மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications