நீல நிற Fiat Select காரை தானே ஓட்டி மகிழ்ந்த ஸ்டாலின்! கருப்பு சிகப்பு உடையில் மாஸ் காட்டிய முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஃபியட் செலக்ட் காரை கிழக்கு கடற்கரைச் சாலையில் தானே ஓட்டிச் சென்ற வீடியோவை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது எளிமையான வாழ்க்கை முறைக்காக அறியப்படுகிறார். சென்னை குளிரில் காலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொள்வது, கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் ஓட்டுவது போன்ற விஷயங்களை அவர் விரும்புவார். அவ்வப்போது காரில் உலா வருவதும் உண்டு.

அந்த வகையில், இன்று காலை அவர் தனது தனிப்பட்ட பயணத்திற்காக, பழமையான 'ஃபியட் செலக்ட்' காரை ஓட்டிச் சென்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபியட் கார்கள் மீது ஒரு எப்போதும் பிரியம் உண்டு. இவ்வாறு டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

Cm Stalin

நீல நிறத்தினாலான ஃபியட் செலக்ட் காரை முதல்வர் ஓட்டிச் சென்றார். முன்னால் எஸ்கார்ட் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது முதல்வர் கருப்பு பேன்ட், சிகப்பு நிற டீசர்ட் அணிந்திருந்தார்.

முதல்வர் தினந்தோறும் அடையார் தியோசாபிகல் சொசைட்டியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் செல்வது வழக்கம். அது போல் சில சமயங்களில் வாக்கிங் போகும் போது குறிப்பிட்ட திட்டங்களின் ஆய்வு பணிகளையும் முதல்வர் மேற்கொள்வது உண்டு. ஒரு சில சமயங்களில் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு சைக்கிள் ஓட்டி மகிழ்வார். மேலும் அங்குள்ள சாலையோர டீக்கடைகளில் டீ குடித்துக் கொண்டே மக்களின் நலன் விசாரிப்பார்.

அந்த வகையில் இன்று கிழக்குக் கடற்கரை சாலைக்கு சென்ற ஸ்டாலின், நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு ஃபியட் செலக்ட் காரை ஓட்டி மகிழ்ந்தார்.

அவ்வப்போது ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு மற்றவர்களுக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளார். உடல்நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு முறை முதல்வர் கார் ஓட்டும் வீடியோ வைரலானது. பழைய மாடல் ஃபியட் பத்மினி காரை ஓட்டினார். அந்த கால கட்டத்தில் அவருக்கு காய்ச்சல், தொண்டை வலி,உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததால் வீட்டில் ஓய்வெடுத்தார்.

இதையடுத்து அடையாறில் உள்ள பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காரை ஓட்டிச் சென்றார். முதல்வரின் காருக்கு முன்பும் பின்பும் பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் புடைச்சூழ ஸ்டாலின் காரை ஓட்டினார்.

பொதுவாக ஸ்டாலின் ரயில், விமான பயணத்தை விட சாலை மார்க்கமாக காரில் பயணம் செய்வதையே விரும்புவார். திமுக இளைஞரணித் தலைவராக இருந்த போது ஆரம்ப காலங்களில் எல்லாம் கட்சி பணிகளுக்காக காரை ஓட்டிச் செல்வார். அதன் பின்னர் அரசியலில் முக்கிய இடத்தை அடைந்ததும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கார் ஓட்டுவதை தவிர்த்தார்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்றைய தினம் ஃபியட் செலக்ட் மாடல் காரை ஓட்டினார். அந்த காரில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இருந்தார். முதல்வர் காரை ஓட்டியதை அப்பகுதியில் இருந்த மக்கள் புகைப்படம் எடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+