என்னா கேட்ச்சு? இந்திய அணியை அசந்து போய் பாராட்டிய எடப்பாடி பழனிசாமி.. முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து!
சென்னை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டம் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் வசம் இருந்த நிலையில் 16வது ஓவருக்குப் பின் கதையே மாறியது.

இந்திய பவுலர்களின் அட்டகாசமான பந்துவீச்சால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் வெற்றிக்கான தங்களது பங்களிப்புகளை அளித்து உலகக் கோப்பையை உறுதி செய்தனர்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று உள்ள இந்திய அணிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "எங்கள் #MenInBlue அவர்களின் இரண்டாவது T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி! நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துகள், இந்திய அணி" எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், "17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள்.

டி20 உலகக்கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைசிறந்த டெத் ஓவர் பவுலிங்கில் ஒன்றாக இந்த ஆட்டம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், "ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் நமக்கு எதிராக இருந்தபோதும், அணி கைவிடவில்லை, தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றியது. இறுதியில் ஒரு மிகப்பெரிய கேட்ச் வெற்றியை உறுதிப்படுத்தியது! தொடர் முழுக்க சாம்பியன்களை போன்றே விளையாடினார்கள், இந்திய அணிக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த ஐசிசி கோப்பையை வெல்வதற்கு நம்முடைய சாம்பியன் அணி முழு தகுதி பெற்றிருப்பது என்பதில் சந்தேகமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், "கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி!
மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள்! இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது!" எனத் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்?












Click it and Unblock the Notifications