ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முதல்நாள்.. இப்படியா நடக்கணும்? செதில் செதிலாக நொறுங்கிடுச்சே.. அடடா
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விளையாட்டாக சொன்ன ஒரு கமெண்ட் திமுகவில் புயலை கிளப்பி உள்ளது. அதோடு இல்லாமல்.. திமுகவிற்குள் அனைத்தையும் காமெடியாக பேசும் மூத்த அமைச்சர் துரைமுருகன் இதற்கு தந்த ரியாக்சன்.. திமுகவில் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. இத்தனையும் நடப்பது.. நாளை முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முதல்நாள் என்பதுதான் அதிர்ச்சி தரும் விஷயம்.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது திமுகவில் குட்டையை குழப்பி உள்ளது. அதில், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.

சீனியர்கள்: ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை. எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.
இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசிக்கட்ட நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்.. இவ்வாறு அவர் கூறினர். ரஜினிகாந்த், "ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரல்விட்டு ஆட்டியவர் என்று துரைமுருகனை கலாய்த்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், "பல்லு விழுந்த நடிகர்கள்" என்று கோபமாக கூறினார்.
கோபம்: முன்னதாக ரஜினிகாந்த் பேச்சுக்கு ஸ்டாலின் அளித்த பதிலில், என்னை விட வயதில் மூத்தவர் என்ற முறையில் எனக்கு அறிவுரை கூறியதற்கு நன்றி. நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம், என்றும் கவனமாக இருப்பேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கும் நன்றி என்று நடிகர் ரஜினியின் அறிவுரையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
விரும்பவில்லை: ரஜினியின் நேற்றைய பேச்சை துரைமுருகன் விரும்பவில்லை.. ஆனால் அதை ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ரசித்தார் என்று கூறப்படுகிறது. அதாவது சீனியர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அதற்கு விடக்கூடாது என்றே உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் நினைப்பதாக கூறப்படுகிறது.
இதை தாங்கள் சொல்ல முடியாது.. ஆனால் ரஜினி சொல்லிவிட்டார் என்பதால் உதயநிதி, ஸ்டாலின் ஆகியோர் அதை ரசித்தனர். இன்னொரு பக்கம்.. துரைமுருகன் சில சீனியர்களிடம் பேசி.. ரஜினி என்ன இப்படி பேசி இருக்கிறார்.. முதல்வரும் இதை வழிமொழிகிறார்.. நாம் என்ன ஆட்சிக்கு சிக்கலாகவே இருக்கிறோம் என்று பேசி இருக்கிறாராம். ரஜினியின் பேச்சு காரணமாக துரைமுருகன் பெரிய அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் வெளிநாடு; உதயநிதி பதிலடி; இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி பேசுகையில், இளைஞர்களுக்கு வழிவிட்டு, வழிநடத்தி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.. இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும். நேற்று ரஜினிகாந்த் பேசினார். அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார். அது என்ன என்று சொல்ல மாட்டேன்.
ஆனால் அவரின் பேச்சுக்கு ஒரு இடத்தில் கைத்தட்டு அதிகம் வந்தது. அது எந்த இடம் என்று பாருங்கள். நேற்று சூப்பர் ஸ்டார் பேசியதை வைத்தே பாருங்கள். நான் எதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுவதாக நினைக்க வேண்டாம். இதுதான் என் வேண்டுகோள்., என்று உதயநிதியும் தன் பங்கிற்கு துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்தார்.
என்ன நடக்கிறது?: இப்போது உதயநிதி vs துரைமுருகன் என்று நிலைமை திமுகவில் ஏற்பட்டு உள்ளது அல்லது உதயநிதி vs ஸ்டாலின் என்று நிலைமை மாறி உள்ளது. சரியாக ஸ்டாலினை நாளை வெளிநாடு செல்லும் நேரத்தில் இப்படி எல்லாம் பிரச்சனைகள் நடந்துள்ளன என்பதுதான் இதில் ஹைலைட்டே.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications