முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், உதயநிதி.. திருநாவுக்கரசர் வீட்டு நிகழ்ச்சியில் குவிந்த அரசியல் தலைகள்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான திருநாவுக்கரசர் மகன் சாய் விஷ்ணு - நடிகை மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய - மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு - நடிகை மேகா ஆகாஷ் இருவருக்கும் நாளை திருமணம் நடைபெறும் நிலையில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின், மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி வாழ்த்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவராகவும், மத்திய, மாநில அமைச்சராகப் பொறுப்புகளை வகித்துள்ளவருமான காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் தான் சாய் விஷ்ணுவுக்கும் - நடிகை மேகா ஆகாஷுக்கும் நாளை காலை திருமணம் நடைபெற இருக்கிறது.

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். ரஜினிகாந்த்தின் 'பேட்ட’ படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த மேகா ஆகாஷ் கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக 'மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார்.
திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் சாய் விஷ்ணு, சென்னை லயோலா கல்லூரியில் பி. காம் முடித்ததோடு நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குநர் பா. ரஞ்சித்திடம் காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு இருவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வரும் நிலையில் பெற்றோர் சம்மதத்தோடு மண வாழ்வில் இணைந்துள்ளனர்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications