அமித் ஷா வேகமா இருப்பார்.. உடனே டெல்லிக்கு போங்க.. ஸ்டாலின் பரபரப்பு ஐடியா.. கச்சேரி களைகட்டுது
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் அல்லது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று இந்திய கூட்டணி கட்சிகள் நினைக்கின்றன. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்திய கூட்டணி தலைவர்களுக்கு முக்கியமான ஐடியா ஒன்றை கொடுத்து உள்ளாராம்.
2024 லோக்சபா தேர்தல் நேற்றோடு நிறைவு பெற்றுள்ள நிலையில் எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளன நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல் நடந்தது.

காங்கிரஸ்: இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணி 295 இடங்களுக்கும் மேல் வெல்லும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் ஆளாக தங்கள் கட்சியின் சொந்த கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
முதல் ஆளாக நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியே இந்தியா கூட்டணி பற்றி அறிவித்துள்ளது. நேற்று இந்திய கூட்டணி மீட்டிங்கிற்கு பின் இந்த முடிவை அறிவித்துள்ளனர். இந்திய கூட்டணி தலைவர்கள் பல மாநிலங்களில் இருந்து திரட்டிய ரிப்போர்ட்டை வைத்து இந்த முடிவை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் ஐடியா: இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்திய கூட்டணி தலைவர்களுக்கு முக்கியமான ஐடியா ஒன்றை கொடுத்து உள்ளாராம். எம்பி டி ஆர் பாலு மூலம் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில தகவல்களை அனுப்பி உள்ளாராம். அதில், இப்போது காங்கிரஸ், பாஜக மற்றும் என்டிஏ கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லை. காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லை என்றாலும் இந்தியா கூட்டணிக்கு மெஜாரிட்டி உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.
இப்படித்த சமயங்களில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் அதற்கு பதிலாக பாஜக தான்தான் தனியாக அதிக இடங்களை வென்ற கட்சி . அதனால் எங்களுக்கு ஆட்சி அமைக்க உரிமை அளிக்க வேண்டும். ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உரிமை கோர வாய்ப்புகள் உள்ளது.
இந்த விவகாரத்தில் அதிகாரம் அவர்கள் பக்கம் இருக்கும். இதை நாம் விட கூடாது. அதனால் நாம் எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். நம்முடைய எம்பிக்கள் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று பிற்பகலில் தெரிந்தால் அன்று மாலையே டெல்லிக்கு செல்ல வேண்டும்.
அன்று இரவே இந்திய கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். அமித் ஷா வேகமா இருப்பார். நாம் அவரை விட வேகமாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் கடந்த தேர்தலுக்கும் முந்தைய தேர்தலில் தொங்கு சட்டசபை உருவான போது மெஜாரிட்டி இருந்த காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சிக்கு அழைக்காமல் தனிப்பெரும் கட்சியான பாஜகவை மெஜாரிட்டி இல்லை என்றாலும் ஆட்சி அமைத்து அதன்பின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைத்தார்.
அதே மாடலை தேசிய அளவில் பாஜக செய்யலாம் என்கிறார்கள். அதை நாம் விட கூடாது, என்று ஸ்டாலின் ஐடியா கொடுத்துள்ளாராம்.
-
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications