இனி ஒவ்வொரு அடியும் தீ மிதிக்கிற மாதிரி.. ஸ்டாலினுக்கு வந்த "முக்கோண தலைவலி".. இதை எதிர்பார்க்கலையே
சென்னை: ஆளும் திமுகவிற்கு தற்போது முக்கோண தலைவலி ஒன்று ஏற்பட்டு உள்ளது. திமுக எதிர்பார்க்காத தலைவலி அது.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்து உள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த 34 வயது இளைஞர் மரணம் அடைந்துள்ளார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.

இன்று காலைதான் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அய்யாசாமி, தெய்வாரா ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ். சிவக்குமார்(40), கதிரவன்(30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 59 ஆக உயர்ந்த நிலையில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது போக கல்வராயன் மலையில் சிறப்பு அதிரடிப்படையினர் 2வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சத்தியமங்கலம், பவானி உள்ள முகாம்களில் இருந்து கல்வராயன் மலைக்கு விரைந்து உள்ளனர்.
போலீஸ் சந்தேகம்: கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விவகாரம்தான் இத்தனை மரணங்களுக்கும் காரணம். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
ஸ்டாலினுக்கு முக்கோண தலைவலி: இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளும் திமுகவிற்கு தற்போது முக்கோண தலைவலி ஒன்று ஏற்பட்டு உள்ளது. திமுக எதிர்பார்க்காத தலைவலி அது.
1. முதல் விஷயம் ஆளும் திமுகவிற்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற முக்கோண கூட்டணி உருவாகி உள்ளது. அது நாம் தமிழர் - அதிமுக - விஜய் கூட்டணி.
2. இதில் நாம் தமிழர் - அதிமுக - விஜய் மூன்று பேருக்கும் நல்ல வலுவான ஐடி விங் உள்ளது. ஒன்று ரசிகர் மற்ற ஐடி விங். மற்ற இரண்டு அரசியல் ஐடி விங்.
3. இதில் விஜய் ஐடி டீம் ஏற்கனவே பல மோசமான சண்டைகளை பார்த்த டீம். எளிதாக டிரெண்டிங் செய்து பழக்கப்பட்ட டீம்.
4. தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக நாம் தமிழரை கூட்டணிக்கு அழைக்கலாம். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
5. முக்கியமாக எடப்பாடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன்னை சிறந்த எதிர்க்கட்சி தலைவராக முன்னிறுத்தி உள்ளார். சுணங்கி போய் இருந்த அதிமுக ஐடி விங்கை இது தட்டி எழுப்பி உள்ளது.
6. திமுகவிற்கு 2026 சட்டசபை தேர்தல் கண்டிப்பாக எளிதாக இருக்காது என்று எடப்பாடி டஃப் கொடுத்துள்ளார். எனவே இனி ஒவ்வொரு அடியும் தீ மிதிக்கிற மாதிரி திமுக கவனமாக வைக்க வேண்டும்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications