அதோ பாருங்க.. சாலையோரம் அந்த பெயரை பார்த்ததும்.. ஒரு நொடி ஸ்டன் ஆகி நின்ற ஸ்டாலின்.. ஏன்?
சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சாலையோரம் பார்த்த பெயர் ஒன்று கவனம் பெற்றுள்ளது. இந்த பெயரை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியது இணையத்தில் கவனம் ஈர்த்து உள்ளது.
கடந்த 2022 ம் ஆண்டு மருத்துவ படிப்புகளில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு அளிப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

திமுக எம்பி வழக்கறிஞர் வில்சன் மற்றும் திமுக வழக்கறிஞர் அணியின் இடைவிடாத சட்ட போராட்டம் காரணமாக இந்த இடஒதுக்கீடு கிடைத்தது. இவர்கள் தொடுத்த வழக்கு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மூலம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. கிட்டத்தட்ட கடந்த 2 வருடமாக நடத்தப்பட்ட சட்ட போராட்டத்திற்கு பின் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கில் வில்சன் வைத்த வாதங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றன. வடஇந்தியர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு நன்றி சொல்லும் நிலை கூட ஏற்பட்டது. அதே போல்.. வில்சன் இதற்கு முன் வேறு ஒரு முக்கிய வழக்கிலும் வாதாடி இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்யும் வழக்கிலும் இவர்தான் வாதிட்டார். இந்த நிலையில்தான் அவர் திமுகவில் தற்போது கவனிக்கப்படும் எம்பியாகவும் மாறி உள்ளார்.
அமெரிக்கா ஸ்டாலின்: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று சாலையோரம் பார்த்த பெயர் ஒன்று கவனம் பெற்றுள்ளது. இந்த பெயரை முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியது இணையத்தில் கவனம் ஈர்த்து உள்ளது. அந்த பெயர் வேறு எதுவும் இல்லை.. வில்சன் என்ற பெயர்தான். வில்சன் பெயரை பார்த்ததும்.. அதோ பாருங்க.. நம்ம லாயர் வில்சன் பெயர் என்று முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு இடையில் அமெரிக்கா சென்றாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பேன். என் முழு கவனமும் தமிழத்தில்தான் இருக்கும். அதேபோல, உங்கள் ஒவ்வொருவரையும் மத்திய அரசு கண்காணித்தபடி இருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்; கவனமாக இருங்கள் என்றெல்லாம் அமைச்சர்களை எச்சரித்துள்ளாராம் ஸ்டாலின்.
இதுகுறித்து மாநில உளவுத்துறைக்கும் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில், தமிழகத்தில் நடக்கும் அத்தனை விசயங்களையும் ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் உள்ள முதல்வருக்கு அனுப்பி வைக்கிறது உளவுத்துறை. உயரதிகாரிகளிடம் நேற்று பேசிய முதல்வர் தரப்பு, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார்கள் ? என்ன செய்கிறார்கள் ? என விசாரித்துள்ளது.
ஸ்பெஷல் கேள்வி: அமைச்சர்களின் தினசரி செயல்பாடுகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனை பற்றி ஸ்பெஷலாக கேட்டிருக்கிறது மேலிடம். அப்போது, முதல்வரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த கையோடு காட்பாடி சென்றவர் அங்குதான் இருக்கிறார். இப்போது வரை சென்னைக்கு வரவில்லை. அனேகமாக சனிக்கிழமைதான் சென்னைக்கு வருவார் என விபரங்களைத் தந்துள்ளனர்.
அதேபோல, சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரை கைது செய்வதா? தவிர்ப்பதா? என்று முதல்வர் தரப்பிடம் கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள். கேபினெட் கூட்டத்தில் எச்சரிக்கை செய்தது போல, அமைச்சர்களின் அன்றாட செயல்பாடுகளை கவனித்து வருகிறார் ஸ்டாலின் என்பதே திமுகவில் பேசப்படும் சீக்ரெட் டாபிக்.












Click it and Unblock the Notifications