அண்ணா அறிவாலயத்தில் கமகமத்த பிரியாணி! தொண்டர்களுக்கு விருந்து கொடுத்த ஸ்டாலின்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த காலத்தில் வந்த பிறந்தநாள்களை விட இந்த ஆண்டு பிறந்தநாளை வெகு விமரிசையாக தொண்டர்களும் நிர்வாகிகளும் கொண்டாடி வருகிறார்கள்.
இதற்கு காரணம் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கொண்டாடப்படும் பிறந்தநாள் இதுவாகும். 69 ஆவது பிறந்தநாள் என்பதால் ஆங்காங்கே 69 எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

69 கிலோ கேக்
69 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆழ்வார்பேட்டை வீட்டில் மனைவி, மகன், மகள்,மருமகள், பேர குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

விருந்து நிகழ்ச்சி
அங்கு மூத்த நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளையும் பரிசுகளையும் பெற்றார். ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

வெஜ் பிரியாணி, நான் வெஜ் பிரியாணி
அதன்படி வெஜ் பிரியாணி, நான் வெஜ் பிரியாணி பாக்கெட்டுகள் அண்ணா அறிவாலயத்தை வந்தடைந்தன. அவற்றை நிர்வாகிகள் தொண்டர்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் கமகமக்கும் பிரியாணி விருந்தை பெற அங்கு கூட்டம் கூடியுள்ளது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களையும் உணவை வழங்கி உதவி வருகிறார்கள். ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை அனுப்பியுள்ளார்கள். அது போல் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டருகேவும் தொண்டர்கள் திரண்டு வாழ்த்தி வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications