சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கிரீன் சிக்னல்"?.. வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கொடுத்த "அந்த" வாக்குறுதி?

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை கவனித்தீர்களா?

Recommended Video

    Venkaiah Naidu அழைத்தது பற்றி முதல்வர் MK Stalin விளக்கம் | #politics

    குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் வரும் ஜூலையுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம் இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்

    அனைத்து கட்சியினரும் ஏற்றுக் கொள்ளும்படியான வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதே வேளையில் குடியரசுத் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவராகும் எண்ணம் இருப்பதாக தெரிகிறது.

    தெலுங்கானா ஆளுநர்

    தெலுங்கானா ஆளுநர்

    தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்திரராஜனை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தினால் அவருக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் என கணக்கு போட்டது பாஜக. இந்த நிலையில் தமிழிசைக்கு இருக்கும் அதே ஆதரவு வெங்கையாவுக்கும் கிடைக்கும் என பாஜக கருதுகிறதாம்.

    குடியரசுத் தலைவர்

    குடியரசுத் தலைவர்

    குடியரசுத் தலைவர் தேர்வு என்பது நாடாளுமன்றத்தின் இரு அவைகள் , மாநில சட்டசபை உறுப்பினர்கள் இணைந்து வாக்களிப்பதாகும். அந்த வகையில் 51 சதவீத ஆதரவு எந்த வேட்பாளருக்கு இருக்கிறதோ அவர்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால் பாஜகவுக்கு தற்போது 50 சதவீத ஆதரவுதான் உள்ளது.

    3ஆவது கட்சி

    3ஆவது கட்சி


    இதனால் நாடாளுமன்றத்தின் 3ஆவது பெரிய கட்சியாக உள்ள திமுகவின் ஆதரவை பெற பாஜக முயற்சிக்கிறதாம். குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடுவை நிறுத்தினால் ஆதரவு கொடுக்கலாம் என திமுக நினைத்திருந்ததாம். இந்த நிலையில்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு குடியரசுத் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

    திமுக தலைவர்

    திமுக தலைவர்

    விழாவில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதை கேட்ட வெங்கையா நாயுடு மகிழ்ச்சியாக டெல்லி திரும்பியிருக்கிறார் என தகவலறிந்தவர்கள் சொல்கிறார்கள். காரணம் விழா மேடையிலேயே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஆதரவை மறைமுகமாக திமுக தெரிவித்ததுதானாம்.

    துரைமுருகன் பேச்சு

    துரைமுருகன் பேச்சு

    ஆம் முதலில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, வெங்கையா நாயுடு நம்மாளுங்க. சென்னையில் என் எதிர் வீட்டுக்காரர், ஆந்திராகாரராக இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ளவர்களை போல் வேட்டி கட்டுகிறார் என்றார். அது போல் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் கருணாநிதியின் சிலையை திறக்க யாரை அழைப்பது என யோசித்த போது நெஞ்சில் தோன்றியது வெங்கையா நாயுடுதான்.

    கிரீன் சிக்னல்

    கிரீன் சிக்னல்

    இந்தியாவில் பல குடியரசுத் தலைவர்களையும் நிலையான ஆட்சியையும் உருவாக்க துணை நின்றவர் கருணாநிதி. அதிமுக ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது துடிதுடித்து போனவர் வெங்கையா நாயுடு என தெரிவித்துள்ளார். இந்த பேச்சில் வெங்கையா நாயுடுவுக்கு கிரீன் சிக்னலை முதல்வர் ஸ்டாலின் காட்டியுள்ளார்.

    சிலைத் திறப்பு விழா

    சிலைத் திறப்பு விழா

    அதில் முதலாவது, கருணாநிதி சிலை திறப்பு விழா என்றதும் என் மனதில் தோன்றிய வெங்கையா நாயுடு. இரண்டாவது, மிக முக்கியமானது, இந்தியாவில் பல குடியரசுத் தலைவர்களை உருவாக்க துணை நின்றவர் கருணாநிதி என ஸ்டாலின் தெரிவித்த இந்த பாயிண்ட்தான் கிரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது. வெங்கையா நாயுடு பாஜக நிறுத்தும் வேட்பாளர் என்பதை காட்டிலும் அவர் குடியரசுத் தலைவரானால் தமிழகத்திற்கு தேவையானவற்றை சாதித்துக் கொள்ளலாம் என திமுக நினைப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாம்.

    மேலும் இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து போராடும் தமிழகத்தில், "எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதால் திமுகவும் ஹேப்பி!

    English summary
    CM Stalin gives green signal for Venkaiah Naidu who is going to be contested in Presidential election?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X