பிளான் 440.. ஸ்டாலின் தனித்தனியாக கொடுத்த டார்கெட்.. வேறு ரூட்டை எடுக்கும் திமுக.. கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆளும் திமுக தரப்பு புதிய வாக்குச்சாவடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு ஒரு டார்கெட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ஆளும் திமுக தரப்பு தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில் வாக்குச்சாவடி பணிகளை தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்கிற பிரச்சாரம் திமுக சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கச்சாவடியிலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த முன்னெடுப்பை திமுக தலைமை கையில் எடுத்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்தும் நோக்கில் பூத் கமிட்டிக்கான இந்த பிரத்யேக இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தனக்கு ஒதுக்கப்பட்ட 24-ஆம் எண் வாக்குச்சாவடியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பங்கேற்றார். ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இந்த வாக்குச்சாவடி, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
முன்பு, காணொலிக் காட்சி மூலம் மாவட்டச் செயலாளர்களுடன் உரையாற்றியபோது, தனது வாக்குச்சாவடி கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தனது வாக்குச்சாவடியில் குறைந்தது 440 வாக்குகளைப் பெற வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு அவர் இலக்கு நிர்ணயித்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடி குழு உறுப்பினருக்கும் குறிப்பிட்ட பணிகளை அவர் ஒதுக்கினார்.
ஸ்டாலின் டார்கெட்
இதேபோல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு ஒரு டார்கெட்டை நிர்ணயிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த இந்த இலக்கை எட்டுவதற்கான வியூகங்களை வகுத்த கட்சி நிர்வாகிகள், தங்கள் திட்ட அறிக்கையை உடனடியாகக் கட்சித் தலைமைக்குச் சமர்ப்பித்தனர்.
அதேபோல, தமிழ்நாடு முழுவதும் மாநில நிர்வாகிகள் தொடங்கி அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் அந்தந்த வாக்குசாவடி அருகே இந்த நிகழ்வில் பங்கேற்றனர். வீடு வீடாக சென்று தேர்தல் பணிகளில் ஈடுபடும் திமுக பெண் நிர்வாகிகள் அதிகளவில் பங்கேற்றனர். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுகவின் இந்த நகர்வு திமுக பூத் கமிட்டியை பலப்படுத்தி, அவர்களின் தொண்டர்களை உற்சாகத்துடன் களப்பணியில் ஈடுபடுத்தும் வகையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமித் ஷாவிற்கு ஸ்டாலின் சவால்
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்ட ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்த ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! மிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications