தமிழகத்தை சுற்றிச் சுழலும் முதலமைச்சர்! வாரத்தில் 2 நாட்களாவது மக்களுடன் மக்களாக! டூர் விவரம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வாரத்தில் 2 நாட்களாவது மக்களுடன் மக்களாக ஐக்கியமாகும் வகையில், தனது சுற்றுப்பயணத் திட்டத்தை வகுத்து வருகிறார்.
இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் செல்லும் அவர் அங்கு கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நூலக பணிகளை பார்வையிடுகிறார்.
அதன்பிறகு மதுரையில் இரவு தங்கும் அவர், சாலை மார்க்கமாக நாளை புதுக்கோட்டை மாவட்டம் செல்கிறார்.

சுற்றுப்பயணம்
மக்களிடம் செல் என்ற அண்ணாவின் அறிவுரையை முழுமையாக கடைபிடிக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரும் அதனை தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதங்களும் முடிந்த கையோடு சுற்றுப்பயணத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஊட்டி, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி, திண்டுக்கல், என இதுவரை பல மாவட்டங்களுக்கு நேரடி விசிட் அடித்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசுத் திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருக்கிறார்.

மதுரை பயணம்
இதனிடையே இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவு நூலகத்தை ஆய்வு செய்கிறார். அதனைத் தொடர்ந்து இரவு மதுரையில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளையும் சில நிமிடங்கள் சந்தித்து பேசுகிறார். நாளை சாலைமார்க்கமாகவே புதுக்கோட்டைக்கு காரில் புறப்பட்டுச் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வழி நெடுகிலும் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கவுள்ளார்.

கருணாநிதி பாணி
இது ஏறத்தாழ முழுக்க முழுக்க கருணாநிதி பாணி என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. ஆம், கருணாநிதியும் இப்படித்தான் சாலை வழி பயணத்தை அதிகம் விரும்புவார். பயணம் செய்ய எப்போதும் சலிக்கவேமாட்டார். அதேபோல் தான் முதல்வர் ஸ்டாலினும் தமிழகத்தில் தனது காலடிச்சுவடுகள் பதியாத இடமே இருக்ககூடாது என்கிற வகையில் இப்போது சுற்றிச்சுழன்று வருகிறார். முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே கானொலி மூலம் எல்லா மாவட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியும்.

நேரடி விசிட்
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இப்படித்தான் காணொலி மூலமே எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை அது போல் இல்லாமல், மாவட்டங்களுக்கு நேரடியாக தாமே சென்று அதிகாரிகளுடன் ஆய்வு, மக்களுடன் சந்திப்பு, கட்சியினருடன் சந்திப்பு, திடீர் ஆய்வு என பயண நிகழ்ச்சிகளை வகுத்து வருகிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications