ஸ்டாலின் மேஜையில் வைக்கப்பட்ட.. தனி ஃபைல்.. உள்ளே இருந்த தகவல்.. தமிழக அரசியலையே உலுக்கும்?
சென்னை: கடந்த முறை தமிழ்நாடு - புதுவை சேர்ந்து 39 இடங்களில் வென்றது திமுக. இந்த முறையும் தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி உட்பட 40 இடங்களில் 40லும் திமுக வெற்றி பெற்றுள்ளது. . பாஜக தென்சென்னை, நெல்லை தவிர எங்கும் கடும் போட்டி கொடுக்கவில்லை.
தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் முந்தைய தேர்தல் முடிவுகளை கணக்கிடும் போது வாக்கு சதவீதம் திமுகவுக்கு குறைந்திருப்பதாகவே தகவல் சொல்லப்படுகிறது. : இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் திமுக பெற்ற வாக்குகள், எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள், எந்தெந்த தொகுதிகளில் திமுக வலிமையான வாக்குகளை வாங்கியுள்ளது? எந்தெந்த தொகுதிகளில் திமுக சரிவை சந்தித்திருக்கிறது ? சரிவு ஏற்பட்டிருந்தால் என்ன காரணம் ? உள்ளிட்டவைகளை ஆராய்ந்து முழுமையான ரிப்போர்ட் ஒன்றை தரச் சொல்லி குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.

அதே போன்ற ஒரு ரிப்போர்ட்டை கேட்டு உளவுத்துறை உயரதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். டெல்லி சென்று திரும்புவதற்குள் இந்த ரிப்போர்ட்டை தயார் செய்யும் பணிகளில் இரு தரப்பினரும் மும்முரமாகி இருந்தனர். அந்த ரிப்போர்ட் தற்போது தயாராகி உள்ளது. .
2 ரிப்போர்ட்: நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் திமுக பெற்ற வாக்குகள், எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள் ஆராயப்பட்டு முதல்வர் ஸ்டாலினிடம் 2 ரிப்போர்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. குடும்பத்தை சேர்ந்த மாஸ்டர்மைண்ட் ஒருவர் தரப்பிலிருந்து ஒன்றும், உளவுத்துறை தரப்பிலிருந்து ஒன்றும் என 2 ரிப்போர்ட்டுகள் அவை.
அதில், அதிமுகவை விட பாஜக வாங்கிய வாக்குகள் குறித்த புள்ளிவிபரங்கள்தான் அதிகமாக அலசப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக, பாஜக இரண்டாம் இடத்துக்கு வந்துள்ள தொகுதிகள் பற்றி விரிவாக பேசுகின்றனவாம் அந்த புள்ளி விபரங்கள். அதிமுகவை தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு பாஜக வந்துள்ள இடங்களில், அதிமுகவின் வாக்குகளில் கணிசமானவை பாஜகவுக்கு இடமாறியுள்ளன.
இதே தொகுதிகளில் கடந்த தேர்தலின் போது அதிமுக - பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட்ட போது வாங்கிய வாக்குகளும் தற்போது வாங்கிய வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராயப்பட்டதில்தான், இந்த முறை அதிமுக வாக்குகளில் கணிசமானவை பாஜகவுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகியிருக்கிறது ; அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்றாலும் நிறைய தொகுதிகளில் இந்த கட்சிகள் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் தான் செயல்பட்டுள்ளன. ; அதாவது, 12 இடங்களில் வெற்றிபெறுவோம் என தேர்தலுக்கு முந்தைய நாட்களில் பாஜக தரப்பில் சொல்லப்பட்டது இப்படிப்பட்ட அண்டர்ஸ்டேண்டிங் வைத்துக் கொண்டிருப்பதால் தான் என அந்த ரிப்போர்ட்டுகள் கூறுகின்றதாம்.
தனி ஃபைல்; மேலும், இந்த தொகுதிகளில் திமுக இன்னும் களமாடியிருந்தால் அதிமுக வாக்குகள், பாஜகவுக்கு போகாமல் தடுத்திருக்க முடியும் என்றும், திமுகவினர் தங்களின் கட்சி வாக்குகளை வாங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறது முதல்வரிடம் கொடுக்கப்பட்ட அந்த அறிக்கைகள். மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து, காலை உணவுத் திட்டம் ஆகிய இந்த மூன்றும் இல்லையெனில் இன்னும் பல தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கும் என்றும் ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டுள்ளதாம்.
அதிமுக-பாஜக – பாமக கூட்டணி உருவாகியிருந்தால் ரிசல்ட் வேறு மாதிரி வந்திருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்கிற குறிப்புகள் அடங்கிய தனி ஃபைல் ஒன்றும் முதல்வரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications