சமூகநீதி தழைக்க உங்கள் உழைப்பு பயன்படட்டும்.. ராமதாஸ் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இம்மண்ணில் வேருன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்க தங்கள் உழைப்பு பயன்படட்டும் என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 85ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, ட்விட்டரில் #DrRamadossAyya85, #மருத்துவர்அய்யா85 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவரான ராமதாஸுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

CM Stalin greetings to PMK Founder Ramadoss on his 85th birthday

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும், தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது பொது வாழ்க்கை குறித்து நீண்ட அறிக்கை வெளியிட்ட டாக்டர் ராமதாஸ், இன்னும் தான் அடையவேண்டிய இலக்குகள் குறித்து ஒரு பெரிய பட்டியலே போட்டிருந்தார். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீட்டை பெற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார் ராமதாஸ்.

மேலும், ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு புகையிலை கூட இருக்கக்கூடாது. அனைத்து வகை புகையிலைப் பழக்கங்களில் இருந்தும் மக்கள் மீட்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பெய்யும் மழையில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+