கேரம் சாம்பியன் கீர்த்தனாவுக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: மாலத்தீவில் நடைபெற்ற கேரம் உலக கோப்பையில் மூன்று தங்கப் பதக்கங்களை தட்டித் தூக்கி சாதனை படைத்த சென்னையைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்தினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான இளம் கேரம் வீராங்கனை கீர்த்தனா. கீர்த்தனாவின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அப்போது முதல், வீட்டு வேலை செய்து இரு மகன்களையும், ஒரு மகளையும் வளர்த்து வருகிறார் கீர்த்தனாவின் தாய் இந்திராணி.

மழைக்கு ஒழுகும் வீட்டில், ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவித்தாலும், கேரம் விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் தனது மகளின் கனவை நிறைவேற்ற பக்கபலமாக இருந்து வருகிறார் தாய் இந்திராணி. தன் முன்பு இருந்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து, மாலத்தீவில் நடைபெற்ற கேரம் உலக சாம்பியன் போட்டிக்கு தேர்வானார் கீர்த்தனா.
மாலத்தீவில் உள்ள மாலேவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம்பெற்றனர்.
இதில் கீர்த்தனா, மகளிர் ஒற்றையர், இட்டையர் பிரிவு மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்ததுடன், உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் கேரம் உலகக் கோப்பை தொடரில் கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களை வென்று, உலக அளவில் வடசென்னையை தலை நிமிரச் செய்துள்ளார்.
இந்நிலையில், மாலத்தீவில் நடைபெற்ற 7-வது கேரம் உலக போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி கீர்த்தனாவுக்கு இன்று, தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார். அதே போல, அந்தப் போட்டியில் பதக்கம் வென்ற கேரம் வீராங்கனை காசிமாவுக்கு ரூ.50 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications