தலைவர் ஸ்டாலினுக்கு தலைசுற்றல்.. திமுகவினர் தான் காரணம்! விர்ச்சுவல் வாரியர்ஸையும் விடாத தாடி பாலாஜி
சென்னை: நடைப் பயிற்சியின் போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட திமுகவினர் தான் காரணம் எனவும், மன உளைச்சல் காரணமாகவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் நடிகர் தாடி பாலாஜி.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்று திடீரென சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது.
மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் முதல்வர் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும், அரசு பணிகளை மருத்துவமனையில் இருந்தே கவனிப்பார் எனவும் அறிக்கை வெளியிட்டது.

தொடர்ந்து ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து காலை 7:00 மணிக்கு தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலினை அழைத்துச் சென்ற மருத்துவர்கள்., அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாகவே முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்," நேற்று முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டதில் இருந்தே எனது மனது சரியில்லாமல் போய்விட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீட்டுக்கு வந்து விடுவார். அவருக்காக என்னுடைய பிரச்சனைகள் எப்போதுமே இருக்கும். அண்ணியின் பிரார்த்தனை முதலமைச்சர் ஸ்டாலினை குணப்படுத்தி வீட்டிற்கு கொண்டு வந்து விடும். என்னதான் மருத்துவமனையில் இருந்தாலும், மருத்துவம் பார்த்தாலும், மருத்துவர்கள் நம்மை பார்த்துக் கொண்டாலும், மாத்திரை சாப்பிட்டாலும், குளுக்கோஸ் இருந்தாலும் அதைவிட பூரணமாக குணமடைந்து வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு வழி தான் இருக்கிறது.
அது என்ன வழி என்றால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காலையில் நான் கண்விழித்து எழும்போது நம்மவர்கள் எதையாவது பண்ணி விடக்கூடாது என்று எழுந்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். அப்போ அவருக்கு எவ்வளவு மன உளைச்சல் இருக்கும் பாருங்க.. கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் செய்யும் செயல்கள் நீங்கள் பேசும் வார்த்தைகள், உங்களை பாதிக்கிறதோ, இல்லையோ நிச்சயம் முதலமைச்சரையும், கட்சி தலைவரையும் பாதிக்கும்.
அதற்காகத்தான் அவர் அந்த வார்த்தையை சொல்லியிருக்கிறார். இனிமேல் தயவு செய்து திமுகவினர் பேசும் பேச்சிலும் செயலிலும் கொஞ்சம் கவனமாக இருக்குமாறு நடந்து கொள்ளுங்கள். இதை நான் சொல்ல காரணம் என்னவென்றால் முதலமைச்சரை நாம் தான் பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அது நமது கடமை. இந்த கடமை எங்களை விட உங்களுக்கு அதிகமாகவே உள்ளது. நான் சொல்வது திமுகவுக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் தான்.
தமிழக வெற்றி கழகத்திலிருந்து சமீபத்தில் விலகிய சகோதரி வைஷ்ணவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தலைவர் அறிக்கை விடுகிறார் என்பதை எல்லாம் தாண்டி, ஒரு கட்சியில் இருக்கிறோம்.. ஒரு புதிய கட்சி தொடங்கி இருக்கிறது.. எந்தவித பாதிப்பும் அவமானமும் நமது கட்சிக்கும் தலைமைக்கும் தலைவருக்கும் வரக்கூடாது என்பது கட்சியில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ரொம்ப முக்கியம். அப்படிப்பட்டவர்கள் இதன் மீது கவனம் செலுத்தி பிரச்சனையை முடிக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications