இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி.. 3 ஆண்டு கால திமுக ஆட்சி குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: மு.க.ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை நிரூபித்து காட்டியுள்ளேன் என 3 ஆண்டுகள் திமுக ஆட்சி நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
திமுக அரசு கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. இன்று 3 ஆண்டுகள் முடிந்து 4 ஆவது ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் பொங்க வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு. திராவிட மாடல் ஆட்சி 3 ஆண்டுகளை முடித்துவிட்டு, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
"இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!"
— M.K.Stalin (@mkstalin) May 7, 2024
மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!
நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...
பெருமையோடு சொல்கிறேன்...
"தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!"#3YrsOfMKStalinGovt pic.twitter.com/kJfRKp0OMx
மேலும் மு.க.ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியுள்ளார். "இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!"
மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!
நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...
பெருமையோடு சொல்கிறேன்...
"தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!" என ட்விட்டரில் பதியப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் மக்கள் திமுக அரசின் சாதனைகளை பாராட்டிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன், தோழி பெண்கள் தங்கும் விடுதி, ரூ 1000 மகளிர் உதவித் தொகை, பெண்கள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம், முதல்வரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், சொந்தமாக ஆட்டோ வாங்க கடன் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் பாராட்டி பேசி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications