Chennai Wonderla: சென்னை வொண்டர்லாவை திறந்து வைத்தார் ஸ்டாலின்! நாளை ஒரு நாள் சலுகை கட்டணம்!
சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா (Wonderla) பொழுதுப்போக்கு பூங்காவை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து நாளை முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த சவாரிகளான (rides) பொலிகர், மாபில்லார்ட் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சென்னை வொண்டர்லா எனும் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி பொழுதுபோக்கு பூங்காவான "வொண்டர்லா" ஹைதராபாத், கொச்சி, பெங்களூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த பூங்கா தமிழகத்தில் இல்லை என்றாலும் பெங்களூருக்கு தமிழக இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் படையெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் சென்னையில் வொண்டர்லா அமைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் செங்கல்பட்டில் அமைத்து வருகிறது. இது தமிழகத்தின் முதல் வொண்டர்லா பொதுபோக்கு பூங்காவாகும்.
எங்கே அமைகிறது
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூரை அடுத்த இள்ளளூரில் 65 ஏக்கர் பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ 611 கோடி செலவிடப்பட்டுள்ளது.
என்னென்ன ரைடுகள்
உலக புகழ் பெற்ற ரைடு இங்கு உலக புகழ்பெற்ற Bolliger and Mabillard எனும் ரோலர் கோஸ்டர் அமைகிறது. இது லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் இருக்கிறது. அதுபோன்ற ஒரு பிரம்மாண்ட ரோலர் கோஸ்டர் செங்கல்பட்டில் அமைகிறது. இதற்கு மட்டும் 75 முதல் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். மேலும் இன்வெர்ட்டர்ட் கோஸ்டர் தஞ்சோரா, ஸ்பின் மில், ஸ்கை ரயில் உள்ளிட்ட சவாரிகளும் உள்ளன.
52 சவாரிகள்
மேலும் இந்த வொண்டர்லாவில் பெரியவர்களுக்கு 42 சவாரிகள் உள்ளன. இவற்றில் 16 நீர் சவாரிகளாகும். குழந்தைகளுக்கென பிரத்யேகமாக 10 சவாரிகள் இருக்கும் எனவே மொத்தம் 52 சவாரிகள் இடம் பெற்றுள்ளது.
இன்று திறப்பு
இது எப்போது திறக்கப்படும் என மக்கள் காத்திருந்த நிலையில் இந்த பூங்காவை இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்தபடியே திறந்து வைத்தார். நாளை முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்த பூங்கா 1000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
டிக்கெட் எவ்வளவு
சென்னை வொண்டர்லாவில் அடிப்படை டிக்கெட் விலை ஒருவருக்கு ஜிஎஸ்டி உள்பட ரூ 1489 ஆகும். ஆன்லைனில் முன்பதிவு செய்தால் 10 சதவீத தள்ளுபடியும் கல்லூரி மாணவர்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறதாம். இது போக சீசனுக்கேற்ப பல்வேறு சலுகைகளும் கிடைக்கும் என தெரிகிறது. வார இறுதி நாட்களாக இருந்தால் ஒருவருக்கு ரூ 1,789 வசூலிக்கப்படும். நாளை வொண்டர்லா வருவோருக்கு ரூ 1,199 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
இந்த வொண்டர்லாவில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது. மற்ற ஊர்களில் செயல்பட்டு வரும் வொண்டர்லா பூங்காக்களில் இதுவரை பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இதற்காக தனிக்குழுக்கள் செயல்படுகின்றன. அவர்கள் ரைடுகளை அவ்வப்போது ஆய்வு செய்து பராமரிப்பார்களாம். அது போல் யாராவது கீழே விழுந்துவிட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் அங்கேயே தயார் நிலையில் உள்ளனராம்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications