மனித-வனவிலங்கு மோதல்.. பாதிக்கப்படுவோருக்கான நிவாரண தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு - ஸ்டாலின்
சென்னை: மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மக்கள்தொகை, ஆக்கிரமிக்கப்படும் காடுகள், வனப்பகுதியில் கட்டப்படும் கட்டுமானங்கள், வனங்களை அழித்தல் உள்ளிட்டவற்றால் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி வருகின்றன. இதனால் மனிதர்கள்-வனவிலங்குகள் இடையே பெரிய பிரச்சனை உள்ளது.

சில நேரங்களில் மனிதர்களை வனவிலங்குகள் தாக்கி கொன்று விடுகின்றன. அதேவேளையில் சிலர் வனவிலங்கு தாக்குதலில் காயமடைந்து தப்பிக்கின்றனர். சிலர் வனவிலங்குகளின் கொடூர தாக்கத்தால் சில உறுப்புகளில் ஏற்பட்ட நிரந்தர பாதிப்புடன் வாழ்க்கையை வாழ்கின்றனர்.
இப்படி மனித-வனவிலங்குகள் மோதலில் பாதிக்கப்படுவோருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதே நேரத்தில் மனித -வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன. முதல்வர் முக ஸ்டாலின் இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்கான இழப்பீட்டு தொகையை அதிகரித்துள்ளார்.
அதன்படி மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பதை ரூபாய் 10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications