பாஜகவை எதிர்க்க வலுவான தலைவர் இல்லையா? என்ன சொல்றீங்க? ஸ்டாலின் இருக்காரே! மே.வங்க எம்பி மஹுவா பளீர்
சென்னை: நாட்டில் பாஜகவை எதிர்க்க வலுவாக தலைவர் இருக்கிறார்.. அவர் முதல்வர் ஸ்டாலின் என்று மேற்கு வங்க எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய 'காளி' என்கிற ஆவணப்படம் நாடு முழுக்க புயலை கிளப்பி வருகிறது. இந்த ஆவண பட போஸ்டரில் காளி வாயில் சிகரெட் வைத்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முக்கியமாக வட மாநிலங்களில் இந்த போஸ்டர் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி, உத்தர பிரதேசத்தில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

காளி
இந்த நிலையில்தான் திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் காளி ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு விதமாக பார்க்கப்படுகிறார். காளியை மேற்கு வங்கத்தில் மது குடிக்கும் கடவுளாக பார்ப்பார்கள். காளிக்கு மதுவையும், மாமிசத்தையும் கொடுப்பார்கள். அந்த வழக்கம் உள்ளது.

மஹுவா மொய்த்ரா
இதே வழக்கம் உத்தர பிரதேசத்தில் இல்லை. அங்கே வேறு வழக்கம் உள்ளது. இதை எல்லாம் வைத்து பிரச்சனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, என்று மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுஇருந்தார் . இந்தியா டுடே கான்கிளேவ் நிகழ்ச்சியில் அவர் இப்படி பேசி இருந்தார். இந்த நிலையில் பாஜகவை எதிர்க்க வலுவான தலைவர் நாட்டில் இல்லை என்று நினைக்கிறீர்களா என்று மஹுவா மொய்த்ராவிடம் அந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஸ்டாலின்
இதற்கு பதில் அளித்த மஹுவா மொய்த்ரா, ஸ்டாலின் வலுவான தலைவராக இருக்கிறார். அவர் அனைத்து துறைகளிலும் வலுவாக இருக்கிறார். நான்தான் வலுவான லீடர் லீடர் என்று சொல்ல கூடாது. எனக்கு 56 இன்ச் மார்பு இருக்கிறது என்று நெஞ்சை தட்டிக்கொண்டு இருக்க கூடாது. இதெல்லாம் தேவையில்லாதது. அதில் என்ன திறமை இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு வலுவான தலைவர்கள் இல்லை என்ற கட்டுக்கதையை நிலைநிறுத்துவதை நிறுத்துங்கள்.

வலிமையான தலைவர்
அப்படி ஒரு வாதம் வைப்பது தவறு. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை ஸ்டாலினைப் பாருங்கள். பா.ஜ.க. தனது முழு பலத்துடன் தமிழகத்தில் வாலைக் கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு ஓடியது. பாஜக அங்கு ஏன் ஸ்டாலினிடம் வெற்றிபெற முடியவில்லை?.. முதல்வர் மம்தா பானர்ஜி வலுவான தலைவர்தான்.. என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications