சென்னைக்கு இனி நோ டென்சன்.. இன்று கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இன்று கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னயில் கோடை காலங்களில் குடிநீர் பற்றாகுறை ஏற்படும் நிலையில் இதனை தடுக்கும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ரூ.1516 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வட்டம், நெம்மேலியில் ரூ.1516 கோடி மதிப்பீட்டில், 150 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்ட தொடக்க விழா இன்று 24-ஆம் தேதி காலை 10.00 மணியளவில் நெம்மேலியில் நடைபெறுகிறது. மாபெரும் இக்குடிநீர்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்.
இக்குடிநீர் திட்டத்தை மூலம் சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம் - புழுதிவாக்கம், புனித தோமை யார்மலை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 9 லட்சம் பொது மக்கள் பயன் பெறுவார்கள். இந்த விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவளம், நெம்மேலியில் திருப்போரூர் வடக்கு - தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் கழகத்தினர் திரண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர்.
மிகவும் கோலாகலமாக - எழுச்சியான வகையில் நெம்மேலியில் நடைபெறும் கடல்நீரை குடிநீராக்கும் தொடக்க விழாவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட - மாநகர - பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், கழக அணிகளின் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு வந்து பங்கேற்கும்படி அன்புடன் அழைக்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications