இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கிய 1,370 கணினிகள்.. 70 அரசு பள்ளிகளுக்கு வழங்கினார் முதல்வர்
சென்னை: இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கிய 1,370 கணினிகளை 70 அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 6 பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இன்ஃபோசிஸ் எனும் தகவல் தொழில்நுட்பம் சார்பில் அரசு பள்ளிகளுக்கு கணினிகள் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி சென்னையில் உள்ள 70 அரசு பள்ளிகளுக்கு 1,370 மேசை கணினிகள் வழங்கப்பட்டன.

70 பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக அவற்றை 6 மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 1,370 புத்தாக்கம் செய்யப்பட்ட மேசை கணினிகளை சென்னை பெருநகர மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.03.2022) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை செயலர் Dr. நீரஜ் மித்தல் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications