ஒரே நாளில்.. அடுத்தடுத்து அதிரடி.. தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ஒரேயடியாக போன குட் நியூஸ்.. சபாஷ்
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் உயர்கல்வி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை தமிழ்நாடு அரசு இன்று காலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று (14.08.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை கல்லூரிகள், அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 87 கோடியே 76 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், விடுதிகள், ஆராய்ச்சி மையம், கருத்தரங்குக்கூடம் மற்றும் செய்கலைஞர் ஆய்வுக்கூடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
அந்த வகையில், வேலூர் - தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 150 மாணவர்கள் தங்கும் வகையில் 8 கோடியே 43 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம், கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் - 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள்; திருப்பூர் - எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சிதிலமடைந்துள்ள முதன்மை கட்டடத்திற்கு மாற்றாக 10 கோடியே 94 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம்;
கோயம்புத்தூர் - பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள நவீன அறிவியல் ஆய்வகக் கட்டடத்தின் மேல்பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் தளங்கள் மற்றும் 2 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகாகவி பாரதியார் ஆராய்ச்சி மையம்;
நாமக்கல் என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 18 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்; புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் - 3 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்;
காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 159 மாணவர்கள் தங்கும் வகையில் 8 கோடியே 36 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் விடுதிக் கட்டடம்; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மனிதவள மேம்பாட்டு மையத்திற்கான கருத்தரங்குக் கூடம்;
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கீழநத்தம் கிராமம், சீவலப்பேரி சாலையில் 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொலைதூரக் கல்வி மற்றும் தொடர்நிலை கல்வி இயக்ககத்திற்கான கல்வி வளாகக் கட்டடம்;
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் 60 மாணவர்கள் தங்கும் வகையில் இரண்டாவது தளத்தில் கட்டப்பட்டுள்ள ஆண்கள் விடுதிக் கட்டடம்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், சேலம், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் மதுரை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 23 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செய்கலைஞர் ஆய்வுக்கூடங்கள்;
திருச்சிராப்பள்ளி, அண்ணா அறிவியல் மையக் கோளரங்கத்தில் 3 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட எண்ணிலக்க முழுக்கோள அமைப்பு கோளரங்கம்;
என மொத்தம் 87 கோடியே 76 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications