இது லிஸ்டுலேயே இல்லையே.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு வேறு வகையில்.. செக் வைக்கும் ஸ்டாலின்.. அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக வழக்கு தொடர முடியுமா? என திமுக தலைமை ஆய்வு செய்து வருகிறதாம். மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் நேற்று (14-ந்தேதி) கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக கவர்னர் ரவி, அமைச்சர் பொன்முடி மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் அவர்களை அட்டாக் செய்திருப்பதும், ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய அவர், '' சில தினங்களுக்குமுன் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு நபர் (அமைச்சர் பொன்முடி) பெண்களை மிகக் தரக்குறைவாக பேசியிருந்தார். அப்படிப்பட்ட நபரை நான் கனவான் என கூப்பிடும் கட்டாயத்தில் இருக்கிறேன். அப்படிப் பேசியவர் பெண்களை மட்டும் அவமதிக்கவில்லை, சிவன், விஷ்ணுவை வழிபடுவோரையும் அவர்களுடைய பக்தியையும், அவர்களுடைய உணர்வுகளையும் காலில் போட்டு மிதித்திருக்கிறார்.

Mk Stalin Governor RN Ravi

இயக்கத்தின் பெரிய புள்ளி

அப்படிப் பேசியவர் தனி நபர் அல்ல, தமிழகத்தில் சுமார் 75 ஆண்டுகளாக நிலவிவரும் சூழலின் (திமுக இயக்கம்) ஒரு புள்ளி அவர். அந்த அமைப்பினரால் தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுக்கு ஒப்பீடு செய்வது (உதயநிதியின் கடந்த கால பேச்சு) போன்ற செயல்கள் நடந்து வருகின்றன '' என்று பொன்முடி மற்றும் உதயநிதி யின் பெயரை குறிப்பிடாமல் அட்டாக் செய்த கவர்னர் ரவி, தனது பேச்சை முடிக்கு முன்பாக, ஜெய்ஸ்ரீராம் என்று மூன்று முறை முழக்கமிட, விழாவில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், நிர்வாகிகள் அனைவரையும் ஜெய்ஸ்ரீராம் முழக்க மிட சொல்லியதன் அடிப்படையில் விழாவில் கலந்துகொண்டவர்களும் கோஷ மிட்டிருக்கிறார்கள்.

உறுதி மொழி

கவர்னரின் இத்தகைய பேச்சு சர்ச்சையாகி வருகிறது. அவரின் பேச்சின் முழு வடிவத்தையும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள உளவுத் துறை, ''கவர்னர் என்பவரும் பதவி பிரமாண உறுதி மொழி எடுத்துக் கொள்பவர் தான். அப்படிப்பட்ட அவர் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக பேசுவது, மதரீதியாக முழக்கமிடுவது ஆகியவை எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது. அதனால், அவரை கவர்னர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தலாம் என்கிற ரீதியில் முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இது குறித்து அரசு வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்கவிருக்கிறார் ஸ்டாலின். மேலும், கவர்னரின் இத்தகைய மத ரீதியிலான பேச்சுக்கு அவர் மீது வழக்குத் தொடர முடியுமா? என்று திமுக வழக்கறிஞர்கள் தரப்பும் ஆராய்ந்து வருகின்றனவாம்.

ஸ்டாலின் சட்டம்

கடந்த வாரம் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும்.. 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த உத்தரவு மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு பல்கலை., சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார். இந்த மசோதா சட்டமாக மாறிய நிலையில் அடுத்து முதல்வர் ஸ்டாலின் துணை வேந்தர்களை நியமிப்பார். பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் இல்லை. இன்னும் சில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் திமுகவின் கொள்கைக்கு எதிரான வலதுசாரி கொள்கை கொண்டவர்கள். இன்னும் சில வேறு மாநிலத்தவர்.

இதை எல்லாம் சரி செய்யும் விதமாக புதிய துணை வேந்தர்களை நியமிக்கும் முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுக்க உள்ளார். அதன்படி புதிய துணை வேந்தர்களை நியமிப்பது பற்றி வரும் நாட்களில் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிடுவார்.10 பல்கலைக்கழகங்களில் வரும் நாட்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.

நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள்

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மசோதா

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக மசோதா

வேளாண்மைப் பல்கலைக் கழக மசோதா

தமிழ் பல்கலைக் கழக இரண்டாவது திருத்த மசோதா

மீன்வள பல்கலைக் கழக மசோதா

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா

தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் இரண்டாவது திருத்த மசோதா

தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழக மசோதா

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக மசோதா

தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் மசோதா ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+