மீன்களை வெட்டி சுத்தம் செய்து மகளை மருத்துவராக்கிய ரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் பாராட்டு!
சென்னை: 24 ஆண்டுகளாக மீன்களை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாய் மூலம் தனது மகளை ரஷ்யாவில் படிக்க வைத்து மருத்துவராக்கிய ரமணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார்.
மயிலாடுதுறை புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 24 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு உறவினர்கள் எல்லாம் உதவி செய்ய மறுத்துவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீனை வெட்டிக் கொடுத்து கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்கு சென்றார் ரமணி.

மீன் மார்க்கெட்
மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி செதில்கள் நீக்கி அதை துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பது இவரது பணியாகும். இதற்காக கிலோவுக்கு இருபது ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை மீன் வாங்குபவர்கள் கொடுத்து வந்தார்கள். அந்த பணத்தை பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

ரமணியின் மூத்த மகன்
எல்லா நோய்களும் இல்லாதவர்களுக்குத்தான் வரும் என்பார்கள். அது போல் ரமணியின் மூத்த மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு என்ற மருத்துவத்தால் சரி செய்ய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. இதனால் 10-ஆம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியாமல் தற்போது வீட்டிலேயே இருக்கிறார்.

மீன் வெட்டிக் கொடுக்கும் கூலி தொழில்
மீன் வெட்டிக் கொடுக்கும் வருமானத்தில் இவருக்கு மருந்து மாத்திரை, மகள் படிப்பு செலவு, உணவு, உடை உள்ளிட்ட இதர செலவுகளை பார்த்து வந்தார் ரமணி. இந்த நிலையில் நன்கு படிக்கும் விஜயலட்சுமி 12 ஆம் வகுப்பை முடித்தார். மருத்துவம் படிக்கும் கனவுடன் இருந்த அவருக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வகுப்பில் சேர்ந்தார்.

மருத்துவம்
ஆனால் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தார்.
தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்துவராய் திரும்பியுள்ள மகள் விஜயலட்சுமி இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டிய அங்கீகாரம்தேர்வு எழுத வேண்டியது உள்ளதால் அதற்காக தீவிரமாக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
இதுதொடர்பான செய்திகள் வெளியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் பெண்களின் உயர்கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல. மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடித் தாய்மார்களின் உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டுச்சாதனை. வாழ்த்துகள் மருத்துவர் விஜயலட்சுமி! என வாழ்த்தியிருந்தார்.
|
நேரில் சந்தித்த முதல்வர்
இந்த நிலையில் இரு நாட்கள் பயணமாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், மயிலாடுதுறையை சேர்ந்த தாய் ரமணியையும் மகள் விஜயலட்சுமி, அவரது சகோதரர ரவிச்சந்திரனையும் நேரில் வரவழைத்து பாராட்டினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications