CM Stalin: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஸ்ருதிஹாசன்.. நடைபயிற்சியின்போது நடந்த ட்விஸ்ட்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியின் போது நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசனை சந்தித்து பேசிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அங்கு உடற்பயிற்சி செய்ய வரும் பிரபலங்கள், அரசியல் தலைவர்களை சந்தித்து சில நிமிடங்கள் பேசுவது வழக்கம். அப்படிதான் இந்த சந்திப்பு நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வது வழக்கம். 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது சைக்கிளிங் செல்லும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் ஜிம்மில் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியாகி வந்தன.

அண்மை காலமாக அடையாறு பூங்காவில் ஸ்டாலின் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் கூட நடைபயிற்சியை கைவிடவில்லை. அந்த வகையில் ஸ்டாலின் நடைபயிற்சியில் ஈடுபடும் போது அங்கு வரும் பிரபலங்கள், அரசியல்வாதிகளை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடுவார்.
சில மாதங்களுக்கு முன்பாக நடைபயிற்சியின்போது ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பு அடுத்தடுத்த நாட்களில் 2 முறை நடைபெற்றது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்ட போது, நடிகையும், மநீம தலைவர் கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து சில நிமிடங்கள் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் ஸ்டாலின் - ஸ்ருதிஹாசன் சந்தித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட ஸ்டாலின் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் பரவலாக உடற்பயிற்சி குறித்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications