திடீரென முதல்வர் வீட்டிற்கு போன டாப் "புள்ளி".. கூடவே இருந்த உதயநிதி.. ஹை-லெவல் மீட்.. என்ன நடந்தது?
சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டில் முக்கியமான நபர் ஒருவருடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலீட்டு உலகில் இந்த ஆலோசனை அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா காரணமாக லாக் டவுன் இருந்த 2021 இறுதி கட்டங்களிலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும்.
இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

பொருளாதாரம்
2031ல் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடையும் இலக்குடன் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது. முக்கியமாக தொழிற்துறையில் மட்டும் 23 லட்சம் கோடியை முதலீடாக பெறும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இது மொத்தம் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தமிழ்நாடு தற்போது வாகனங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், தோல், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட இரசாயனங்கள், மின்னணுவியல், இயந்திரங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கிறது. முக்கியமாக ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

ஆட்டோமொபைல்
2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் திகரித்துள்ளன. இதில் Ford நிறுவனம் சென்னையை விட்டு சென்றது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

குஜராத்
தமிழ்நாட்டில் போர்ட் தொழிற்சாலை மூடப்பட்ட போது அந்த தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதற்காக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த தொழிற்சாலையை வாங்குவதற்கான கடைசி கட்ட பேச்சுவார்த்தைகள் கூட நடைபெற்றன. ஆனால் கடைசியில் டாட்டா நிறுவனம் குஜராத்தில் இருக்கும் போர்ட் நிறுவனத்தை வாங்கிவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை மறைமலை நகரில் உள்ள போர்ட் ஆலை யாராலும் வாங்கப்படாமல் முடங்கியது. இது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.

சந்திப்பு
இந்த நிலையில்தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் வீட்டில், டாடா குழுமத்தின் தலைவர் திரு. என்.சந்திரசேகரன் முதல்வரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இருந்தனர். இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் போர்ட் தொழிற்சாலையை டாட்டா நிறுவனம் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கே சிப் உற்பத்தி, செமி கண்டக்டர் உற்பத்தி, டாட்டாவின் பேட்டரி கார்கள் உற்பத்தி ஆலையை தொடங்குவது பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
-
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்!












Click it and Unblock the Notifications