செந்தில் பாலாஜி எப்படி இருக்காரு? போனை போட்ட ஸ்டாலின்.. இன்னொரு பக்கம்.. அமலாக்கத்துறை போட்ட ரூட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து விசாரித்து வருவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காவிரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு இதய அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 90 சதவிகிதம் வரை அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு பைபாஸ் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் செய்யப்பட இன்று அதிகாலை நேரம் குறிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

CM Stalin on high alert: Checking on minister Senthil Balaji health after his by pass surgery

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் இதய அறுவை சிகிச்சையை பற்றி மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் முதல்வருக்கு அப்-டேட்ஸ்களை தெரிவித்தபடி இருக்கிறார். அதேபோல, சிகிச்சை முறைகளை அமலாக்கத்துறையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

செந்தில் பாலாஜிக்கான பைபாஸ் சிகிச்சை பரபரப்பை ஏற்படுத்தி வரும் அதேசமயம், செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு மீண்டும் ஒரு முறை சம்மன் அனுப்பும் முடிவை அமலாக்கத்துறயினர் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே அனுப்பப்பட்ட சம்மனுக்கு நேற்று அசோக் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் அவர் ஆஜராகாமல் தவிர்த்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவும், லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதை வைத்தே அவரை கைது செய்யவும் அமலாக்கத்துறை திட்டமிடும். அது மட்டுமின்றி அசோக் ஆஜராகாமல் தட்டிக்கழிப்பதை வைத்தே இதேபோல்தான் செந்தில் பாலாஜியும் ஒத்துழைக்க மறுப்பார் என்ற பாயிண்டை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அமலாக்கத்துறை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அசோக் எங்கு இருக்கிறார் என தேடுதல் வேட்டையையும் ஒருபுறம் ரகசியமாக நடத்திக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை.

வழக்கு பின்னணி: போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் தொடர்பான பண மோசடி விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணபரிவர்த்தனை புகாரின் மீது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தொடர்ந்து 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் 1 மணி நேரத்தில் 200 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளனர்.கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர். அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிங்கள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தினர்.

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தது அமலாக்கத் துறை.

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அவருக்கு செய்யப்பட்ட ஆஞ்சியோவில் 90 சதவிகித அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததால், அதற்காக தனியார் மருத்துவமனையில் அட்மிட்டானார் செந்தில் பாலாஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+