விடாதீங்க! மோடி, அமித்ஷாவின் இந்த வீடியோவை அதிகம் பரப்புங்க! ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷாவின் 2 வீடியோக்களை வலைதளங்களில் அதிகம் பரப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திமுக சார்பில் திராவிட மாதம் என்பது செப்டம்பரில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக திமுக திராவிட மாத கொண்டாட்டத்தை கொண்டாடி வந்தது.

திமுக ஐடி விங்க் சார்பில் ஏற்படுத்தப்பட்ட எக்ஸ் ஸ்பேஸ் (முன்பு ட்விட்டர் ஸ்பேஸ்) கலந்துரையாடலில் திமுக தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வந்தனர்.
இந்நிலையில் தான் திராவிட மாத கொண்டாட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த 4 முக்கிய செயல்களை வலைதளங்களில் செய்ய வேண்டும் என கட்டளையிட்டார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 10 ஆண்டுகளாக பாஜக பம்மாத்துக்கு செய்கிறது. உண்மை பிரச்சனை பற்றி பாஜக பேசுவது இல்லை. இதற்கு சில ஊடகங்களுக்கு துணை போகிறது. சந்திரயான்-3, ஜி20 மாநாடு நடத்துவதாக படம் காட்டுகிறார்.
இதனால் பாஜக நிறைவேற்றாத வாக்குறுதிகளை எடுத்து வலைதளங்களில் அதிகம் பரப்ப வேண்டும். வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறியதாகவும், அதனை ஏமாற்று வேலை என அமித்ஷா கூறியது தொடர்பான வீடியோவை அதிகம் பரப்ப வேண்டும். மணிப்பூரில் இளம்பெண்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த விவகாரத்தில் பிரதமர் மோடி கருத்து என்ன? என்பது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.
இதுமட்டுமின்றி மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாஜக எம்பி (பிரிஜ் பூஷன் சரண் சிங்) பாலியல் தொல்லை கொடுத்தது குறித்த கேள்வி கேட்க வேண்டும். இதை செய்தாலே 40ம் நமதாகும். கருணாநிதி விட்டு சென்ற பணியை நாம் முன்னெடுப்போம். விரைவில் வெற்றிவிழாவாக கொண்டாடுவோம்'' என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications