Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் எஸ்றா சற்குணம் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. எஸ்றா சற்குணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இறுதிநாள் வரை சேவையாற்றியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் கடந்த 22 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 86. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி எஸ்றா சற்குணம் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ezra sargunam mk stalin

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுடன் பேராயர் எஸ்றா சற்குணம் நெருக்கமாக பழகியவர். குறிப்பாக மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரோடு நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தவர். பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். பல்வேறு அரசியல் பிரபலங்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர்.

மறைந்த எஸ்றா சற்குணத்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதை அடுத்து சென்னையை அடுத்த வானகரத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலிக்கு பிறகு பேராயர் எஸ்றா சற்குணத்தின் உடல் இன்று மாலை கீழ்பாக்கம் கார்டன் காலனி பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உடல் நலக்குறைவால் கடந்த 22ஆம் தேதி அன்று காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களது உடலுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எஸ்றா சற்குணம் தமிழ்ச் சமூகத்திற்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தனது இறுதி நாள் வரை தொடர்ந்து சேவை ஆற்றி வந்துள்ளார். இன்று சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+