விமர்சனங்களுக்காக இம்மியளவும் கவலைப்படுவதில்லை.. நல்லதை எடுத்துக் கொள்வேன்- முதல்வர் ஸ்டாலின்
சென்னை: விமர்சனத்தை பற்றி கவலைப்படவில்லை என முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான், இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும்.
விமர்சனங்களை பற்றி இம்மியளவும் கவலைப்படவில்லை. நல்லவைகளை எடுத்துக் கொள்வேன், கெட்டவைகளை புறம் தள்ளுவேன். இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என வருந்தும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன், இதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். 2 ஆண்டுகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தது போல் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நேற்று 2 ஆண்டுகள் சாதனை கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி என சாதனை மலரையும் வெளியிட்டார். திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications