கருணாநிதி நினைவு தினம்! அமைதி பேரணி சென்று.. அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து அவரது நினைவிடம் வரை 'அமைதிப் பேரணி' நடைபெற்றது. இதன் நிறைவாக கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் உட்பட அமைச்சர்கள். நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் திமுகவினர், கருணாநிதியின் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். சென்னையில் ஒவ்வொரு வட்டம் சார்பிலும், கருணாநிதிக்கு நினைவு அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications