லோக்சபா தேர்தல்.. பணி தொடங்கியது.. வெற்றி வாகை சூடுவோம்.. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: லோக்சபா தேர்தல் பணி தொடங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். பணி முடிப்போம் வெற்றி வாகை சூடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி அரியணையை தக்க வைக்க ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

பாஜகவை தோல்வியடைய வைக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA கூட்டணியை அமைத்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக வலிமையான கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு என மூன்று குழுக்களை அறிவித்து விட்டது.
இந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின்.

தொடங்கியது #Election2024 பணி!
பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்!
#INDIA வெல்லும்!
என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதன் மூலம் லோக்சபா தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இனி கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்புகள் மளமளவென நடைபெறும்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications