முதல் ஆளாக ‘அமரன்’ திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்.. என்ன ரியாக்‌ஷன்? ஜிவிபி சொன்னதை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி ரிலீஸாக இன்று வெளியாகும் 'அமரன்' திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து பார்த்து ரசித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். படம் பார்த்துவிட்டு, படக்குழுவினரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று (அக்டோபர் 31) திரைக்கு வருகிறது 'அமரன்' திரைப்படம். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அமரன்' திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். சோனி நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அமரன் படத்தை வெளியிடுகிறது.

CM Stalin Praises Film Crew After Watching Diwali Release of Sivakarthikeyan Starrer Amaran

மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள 'அமரன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு மும்முரமாகச் செயல்பட்டுள்ளது.

இந்நிலையில், 'அமரன்' படத்தின் சிறப்பு திரையிடலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்துள்ளார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், உள்ளிட்டோருடன் இணைந்து அமரன் படத்தை பார்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரும் படத்தை பார்த்துள்ளனர்.

CM Stalin Praises Film Crew After Watching Diwali Release of Sivakarthikeyan Starrer Amaran

சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், "அமரன் படக்குழுவையும், என்னுடைய இசையையும் பாராட்டிய எங்கள் முதல்வருக்கு நன்றி. இது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

'அமரன்' படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆகும் நிலையில், முந்தைய நாளை படத்தின் சிறப்பு திரையிடலை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+